வசந்தகுமார்ங்கிற ஒரு தனிமனிதரோட உழைப்பு “வசந்த்&கோ”

1978ல VGPல பாத்த வேலைய விட்டுட்டு சொந்தமா வியாபரம் தொடங்கணும்னு முடிவு பண்ணி நண்பரோட கடைய வாடகைக்கு எடுக்குறார். கடையில எந்த சரக்கும் இல்ல. வெறும் காலி அறை. ஆனா அவர் பண்ண முதல் வேலை ‘வசந்த்&கோ’னு ஒரு போர்ட் அடிச்சு மாட்டிருக்கார். “Establishing the brand”.
தெரிஞ்ச ஒரு நண்பர் ஸ்டீல் நாற்காலி செய்றவர். அவர்கிட்ட நாலு நாற்காலி கடனுக்கு வாங்கி அத கடையில போட்டு 25ரூபாய்க்கு வாங்கின நாற்காலிய 30ரூபாய்க்கு வித்து அதுல 5ரூ லாபம் பாத்து அத பெருக்கிருக்கார். “Dealership”
கட்டில், பீரோன்னு ஒவ்வொரு பொருளா விக்க ஆரம்பிச்சுருக்கார். 30ரூ இல்லனு சொன்னா குறைந்தபட்சம் 15ரூ வாங்கிக்கிட்டு ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாய் குடுங்கனு வாங்கிப்பாராம்.
30ரூபாய் கணக்கு முடியுற அன்னிக்கி ஒரு ரூபாய் அதிகம் வாங்கி 5ரூபாய் வர வேண்டிய இடத்துல 6ரூ லாபம் பாப்பாராம். “Installment Plan”
தமிழ்நாட்டுக்குள்ள தொலைக்காட்சி வந்த காலம். ரேடியோ, டிவின்னு எல்லாத்தையும் தவணை முறையில வியாபாரம்.
வியாபார பார்வை எல்லாமே நடுத்தர வர்க்கம் நோக்கி தான். சீட்டு போட்றது, தவணை முறை, குலுக்கல் முறைனு எல்லாம் கொண்டுவந்தார். சிறு நகரங்கள் வரைக்கும் எல்லா இடத்துலயும் கிளைகள உருவாக்கி வியாபாரத்தப் பெருக்கினார். “Developing the base”
இப்டி கொஞ்சமா கொஞ்சமா வசந்த்&கோ க்கு இந்தியாவின் நம்பர்.1 டீலர் ங்கிற அங்கீகாரம் கிடைச்சிருக்கு.
எல்லாமே வசந்தகுமார்ங்கிற ஒரு தனிமனிதரோட உழைப்பு.
நாம சின்ன வயசுல விளம்பரங்களில் அதிகம் பாத்த brand ‘வசந்த்&கோ’ தான்.
கடினமா உழச்சா முன்னேறலாம்னு நம்பிக்கை குடுக்குறது முன்னேறின மனுஷனோட வெற்றி தான்.
வசந்தகுமாரோட வெற்றி ஜெயிக்க நினைக்கிற நிறைய பேருக்கு கண்டிப்பா பெரிய inspiration.
ஆழ்ந்த இரங்கல்கள்..