கேளம்பாக்கம் செல்ல இ-பாஸ் வாங்கினாரா ரஜினி?

ரஜினிகாந்த் நேற்று முன்தினம் மதியம் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து முகக்கவசத்துடன் லம்போர்கினி காரில் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்றார். அவர் செங்கல்பட்டு மாவட்டமான கேளம்பாக்கம் செல்ல இ-பாஸ் பெற்றாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா என்பது குறித்தும், சென்னைக்கு மீண்டும் முறையான பாஸ் பெற்று வந்தாரா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றார்.
மேலும் சென்னையில் 5 லட்சம் பி.சி.ஆர். சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீத மக்களுக்கு விரைவில் சோதனை நடத்தி முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.