ஒவ்வொரு தேர்தலின் போதும் விநாயகருக்கு 108 தேங்காய் உடைக்கும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்க துணை அதிபராக போட்டியிடும் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஒவ்வொரு தேர்தலின் போதும் சென்னை பெசன்ட் நகர் வரசித்தி விநாயகர் கோயிலில் தனது சித்தி மூலம் 108 தேங்காய் உடைப்பாராம்.
தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஷியாமலா கோபாலனுக்கும், ஜமைக்கா நாட்டை ஹாரிஸ் என்பவருக்கும் மகளாக பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். அமெரிக்காவின் பெரிய பதவிகளில் எல்லாம் இருந்தாலும் சென்னையுடனான தனது தொடர்பை புதுப்பித்தபடியே இருந்துள்ளார் கமலா ஹாரிஸ்.
அவரது சித்தி சரளா கோபாலன் சென்னை பெசன்ட் நகரில் வசித்துள்ளார். அங்குள்ள வரசித்தி விநாயகர் கோயில் கட்டுமான குழுவின் உறுப்பினராக கமலாவின் தாய் ஷியாமலா இருந்துள்ளார். 2011-ம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தின் தலைமை வழக்கறிஞராக போட்டியிட்டார் கமலா.

அப்போது தனது சித்தியிடம், எனக்காக வரசித்தி விநாயகர் கோயில் வேண்டிக்கொண்டு தேங்காய் உடையுங்கள் என கூறியுள்ளார். சித்தியும் அதனை நிறைவேற்றியுள்ளார். அத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
2016 எம்.பி., தேர்தலின் போதும் தனது சித்தியிடம் 108 தேங்காய் உடைக்கும் படி கூறியுள்ளார். அந்த தேர்தலின் போதும் அமோக வெற்றி பெற்றுள்ளார் கமலா. இப்போது அவர் போட்டியிடும் துணை அதிபர் தேர்தலுக்கு 1008 தேங்காய் கூட உடைக்கலாம்.
நாட்டின் மிக உயரிய பதவியாக துணை அதிபர் பதவி பார்க்கப்படுகிறது. அப்பதவிக்கு போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி இவர் ஆவார். தனக்கு பிடித்த உணவு இட்லி சாம்பார் என்றும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் மசால் தோசை செய்யும் வீடியோ ஒன்றும் இணையத்தில் பரவி வருகிறது