அக்.8 முதல் ஓமனிலிருந்து, இந்தியாவிற்கு விமான சேவை தொடக்கம்..

ஓமனில் இருந்து இந்திய நகரங்களான தில்லி, மும்பை மற்றும் கொச்சினுக்கு அக்டோபர் 8 முதல் விமான சேவையை தொடங்குவதாக ஓமன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஓமன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,
அக்டோபர் 8 முதல் ஓமனிலிருந்து தில்லிக்கு திங்கள்கிழமையும், தில்லியில் இருந்து ஓமனுக்கு புதன்கிழமையும் விமான சேவை இயங்கவுள்ளது.
ஓமனிலிருந்து மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமையும், அங்கிருந்து ஓமனுக்கு வியாழக்கிழமையும் விமான சேவை அறிவித்துள்ளனர்.
மஸ்கட்டிலிருந்து கொச்சிக்கு ஞாயிற்றுக்கிழமையும், அங்கிருந்து மஸ்கட்டுக்கு வியாழக்கிழமையும் இயக்க உள்ளனர்.
மேலும் இந்த அட்டவணையின்படி, அக்டோபர் 8 முதல் 24 வரை விமான சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.