கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி

ஐக்கிய அரபு அமீரகம், பரிசோதனை நிலையில் உள்ள ஒரு கொரோனா தடுப்பூசியை மிகப்பெரிய அளவில் மக்களுக்கு செலுத்த அவசரகால அனுமதி வழங்கியுள்ளது.
சீனோபார்ம் என்ற சீன மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 கட்ட மனிதபரிசோதனைகளை முடித்துள்ளது. இந்த இரண்டு கட்ட பரிசோதனையிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களிலில் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது தெரியவந்தது. ஆனால் இந்த தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சிறுசிறு பக்கவிளைவுகள் ஏற்பட்டது.
இதையடுத்து, இறுதிகட்டமான 3-ம் கட்ட தடுப்பூசி பரிசோதனை தற்போது நடைபெற தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, பரிசோதனை நிலையில் உள்ள சீனோபார்ம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக கொண்டுவர அமீரக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் பரிசோதனை நிலையில் உள்ள ஒரு
கொரோனா தடுப்பூசியை தங்கள் நாட்டை சேர்ந்த மக்களுக்கு மிகப்பெரிய அளவில் செலுத்த அமீரகம் திட்டமிட்டுள்ளது.
இந்த அவசரகால பயன்பாட்டின்போது மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட கொரோனா முன்கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.