அரசு கஜானா காலி – ஜெ., பங்களாவை ரூ.68 கோடி கொடுத்து வாங்குகிறது அரசு!

தமிழ்நாட்டின் பொருளாதாரம் கொரோனாவால் முடங்கியிருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே வழியில்லை. போக்குவரத்து, மின் துறை கடும் நஷ்டத்தில் இயங்குகிறது. இந்நிலையில் ஜெயலலிதா பங்களாவை நினைவு இல்லமாக்க ரூ.68 கோடி செலவழிக்க உள்ளது அரசு.

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெ. வசித்த ‘வேதா இல்லம்’ உள்ளது. இதை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு ஜெ. வாரிசுதாரர்களான அவரது அண்ணன் மகள் தீபா அவரது சகோதரர் தீபக் ஆகியோர், எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வீட்டின் மதிப்பு 67.90 கோடி ரூபாய் என தீர்மானிப்பட்டது.

தற்போது இதனை நினைவு இல்லமாக மாற்ற இழப்பீட்டு தொகையான 67.90 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் அரசு செலுத்த நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டுள்ளார். நாடு போய் கொண்டிருக்கும் சிக்கலான சூழலில் ஒரு கட்சித் தலைவியின் நினைவு இல்லத்திற்கு இவ்வளவு கோடி செலவிட வேண்டுமா என்று பொது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

நான்கு முறை முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு நினைவு இல்லம் அமைக்கலாம். தப்பேயில்லை. அதனை ஏற்கனவே உள்ள அரசு இடத்தில் சில கோடிகளிலேயே சிறப்பாக அமைக்க முடியும். அவர் வாழ்ந்த இல்லத்தையே தான் நினைவு இல்லமாக மாற்றுவேன் என அரசு அடம் பிடிப்பது ஜெயலலிதாவின் பிம்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் நோக்கம் தானே தவிர, ஜெயலலிதாவின் புகழ் பரப்பும் எண்ணமாக தெரியவில்லை.

அதனால் தான் நினைவில்லத்தில் முதல்வர் அலுவலகமும் அமைக்க பழனிசாமி திட்டமிடுகிறார். போயஸ் கார்டன் கடந்த கால் நூற்றாண்டாக இந்தியாவின் அதிகார மையமாக விளங்கியது. அதனை தக்க வைக்க முதல்வர் பழனிசாமி மக்கள் பணம் 68 கோடி ரூபாயை செலவு செய்ய நினைப்பது தவறாகும். அதுவும் கொரோனா சூழலில் அடிப்படை சுகாதார வசதிகளுக்கே முதல்வர் நிவாரன நிதிக்கு பணம் அனுப்பச் சொல்லி மக்களிடம் கேட்கும் நிலையில் கோடிகளை வாரி இறைப்பது மக்கள் மத்தியில் அதிமுக அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும். இவ்விஷயத்தில் அரசு சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம்.

guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
1
0
Would love your thoughts, please comment.x
()
x