நீதிபதியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய உறவினர்கள்!

ஒரு நீதிபதியின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது உறவினர்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள களங்காணியை சேர்ந்தவர் நடராசன் (92), சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர். தமிழக அரசில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இவரது மனைவி ராமாயி(85), ராசிபுரம் அடுத்த கரட்டுபட்டியை சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு, மகன், மகள் உள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன், ராமாயி இறந்தபோது, சொந்த ஊரில் அடக்கம் செய்ததுடன், நினைவு மண்டபமும் நடராசன் கட்டினார். மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த நடராசன், தான் இறந்த பிறகு ராமாயி சமாதி அருகேதான், தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என கூறிவந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடராசன், நேற்று மருத்துவமனையிலேயே இறந்தார். அவரது உடல், ராமாயி சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இது, உறவினர்கள் இடையே, சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x