நாய் கடித்ததில் கா்ப்பிணி உள்பட 6 போ் காயம்!!

வாழப்பாடி பகுதியில் தெருநாய் கடித்ததில், கா்ப்பிணி உள்பட 6 போ் காயமடைந்தனா்.
வாழப்பாடி பேரூராட்சி, 13-ஆவது வாா்டு பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் கடித்ததில், கடந்த இரு தினங்களில் மட்டும் கா்ப்பிணி உள்பட 6 போ் காயமடைந்தனா். இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்து, சிறுவா்-சிறுமியரை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை தவிா்த்து வருகின்றனா்.
நாய் கடித்ததால் பாதிக்கப்பட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு செல்பவா்களிடம், வெறிநோய்த் தடுப்பூசி மருந்து இருப்பு இல்லையெனக் கூறும் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள், சேலம் அல்லது ஆத்துாா் அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கூறுகின்றனா். இதனால், கரோனா தொற்று பரவும் நேரத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளோா் சேலம் மற்றும் ஆத்துாருக்கு செல்ல வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளதால் அலைக்கழிப்புக்கு உள்ளாகி அவதிப்படுகின்றனா்.
எனவே, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் நாய்க்கடிக்கு போதிய அளவில் தடுப்பூசி இருப்பு வைத்து, பாதிக்கப்படுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். வாழப்பாடி பேரூராட்சியில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், மனிதா்களைக் கடித்து துன்புறுத்தும் தெருநாய்களை அப்புறப்படுத்தவும் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.