“யாருமே மசூதியை இடிக்கவில்லை என்பது வேதனை மிகுந்த வலியாக உள்ளது!” ப.சிதம்பரம் விமர்சனம்!

“உண்மையை மீறும் வகையில் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது” என்று பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதிபர் டிரம்ப்பும், ஜோ பிடெனும் நேற்று முன்தினம் முதல் முறையாக நேருக்கு நேர் கடுமையாக வாதிட்டனர். அப்போது, ஜோ பைடன் அமெரிக்காவில் பரவி இருக்கும் கொரோனா குறித்து வினவிய போது, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் உண்மையான உயிரிழப்பை மறைக்கின்றன. அந்த நாடுகளில் இருந்துதான் காற்று மாசு அதிகமாக ஏற்பட்டுள்ளது என்று கூறி இருந்தார். இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதனை விமர்சிக்கும் வகையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”கொரோனா உயிரிழப்பில் உண்மையை இந்தியா, சீனா, ரஷ்யா மறைப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார். காற்று மாசுக்கும் இந்த நாடுகளை குற்றம்சாட்டியுள்ளார். இன்னொரு முறை தனது நண்பரை அழைத்து அவரை கவுரவப்படுத்தும் வகையில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ என்ற நிகழ்ச்சியை மோடி நடத்துவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
'जेसिका को किसी ने नहीं मारा' कुछ साल पहले का रोना था।
'किसी ने भी मस्जिद को ध्वस्त नहीं किया' आज की पीड़ा है।
ट्रायल कोर्ट के फैसले ने सर्वोच्च न्यायालय के निष्कर्षों को नकारने के अलावा तर्क और सामान्य समझ की भी अवहेलना की है!
— P. Chidambaram (@PChidambaram_IN) October 1, 2020
மேலும், நேற்றைய பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்யப்பட்டனர். இது குறித்தும் கருத்து பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், ‘உச்சநீதிமன்றம் அளித்து இருந்த தீர்ப்பை மறுக்கும் வகையிலும், அறிவு மற்றும் நியாயத்தை மீறும் வகையில் சிபிஐ விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. யாருமே மசூதியை இடிக்கவில்லை என்பது இன்றைய வேதனையான வலியாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.