கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி…

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மெரீனா கடற்கரையில் சிறிது நேரம் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் கனிமொழி, துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் சமூக இடைவெளியுடன் மெரீனா கடற்கரையில் சிறிது தூரம் மட்டும் மவுனமாக கையில் பதாகைகளை ஏந்தி ஊர்வலம்சென்றனர். முதலில் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலின், பின்னர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்து மலர் தூவிஅஞ்சலி செலுத்தினார்.