கொரோனா தடுப்பு திட்டங்களுக்காக சான்றிதழ் பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனத்தின் மூலம் கோவிட்19 ‘பணிபுரியும் இடத்தில் உள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிப்பிட்டுக்கான தரச்சான்றிதழ்’ வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றினை அரசு வெளியிட்டுள்ளது. அதில் “தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாத வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு வரும் வழியில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் சோப்பு கொண்டு கை கழுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

அலுவலக வாசலில் அலுவலகத்திற்கு வரும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளே வரும் அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் கணிணியுடன் இணைக்கப்பட்டுள்ள தானியங்கி வெப்ப பரிசோதனை கருவி மூலம் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு உடல் வெப்பம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் பார்வையாளர்களுக்கான இருக்கைகள் இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இவைகளை இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனத்தின் தமிழக அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் கார்த்திகேயன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனம் கோவிட் 19 காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இவ்வழிமுறைகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மதிப்பீட்டாளர் பார்வையிட்டு சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில், தென்னிந்தியாவில் முதன்முதலில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் துறையின் மூலம் செயல்படுத்தபட்டுள்ள (wash) பணிபுரியும் இடத்தில் உள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிப்பீடு சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரியிடம் இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனத்தின் தமிழக அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் கார்த்திகேயன் நேரில் வழங்கினார். தென்னிந்தியாவிலே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இச்சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x