மருத்துவமனையில் தீ விபத்து; 24 கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்!!!
![](https://thambattam.com/storage/2020/08/fantp-750x470.jpg)
ஆந்திரா மாநிலம் அனந்தபூர் நகரில் அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தை தொடர்ந்து சுமார் 24 கொரோனா நோயாளிகள் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
ஆந்திரா மாநிலம் அனந்தபூர் நகரத்தில் அரசு பொது மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சில கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மருத்துவமனையின் ஒரு அறையில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும் கொரோனா நோயாளிகளின் அறைகளில் புகை பரவி மூச்சுத்திண்றல் ஏற்பட நோயாளிகள் அனைவரும் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்டு சுமார் 24 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து தப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்தில் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.