கொரோனா விதிகளை கடைபிடிக்காத பிரபல ஜவுளி கடைக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்!!

சென்னையில் தமிழக அரசு விதித்துள்ள கொரோனா விதிகளை கடைபிடிக்காததால் தி சென்னை சில்க்ஸ் கட்டத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கடந்த மே மாதம் முதல் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கட்டுபாடுகளுடன் செயல்பட அறிவுத்தியுள்ளது.
சென்னை தி நகரில் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தி சென்னை சில்க்ஸ் நிறுவனம், அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் எழுந்துள்ளது. மேலும், சமூகவலைதளங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டது.
A shop in Tnagar has been #locked and #sealed today, since they allowed overcrowding & didn’t follow the COVID-19 safety protocols. Other such shops, which don’t follow the protocols shall be sealed too. Shop owners & public are requested to strictly follow safety protocols.#GCC pic.twitter.com/MncKIWxfIG
— Greater Chennai Corporation (@chennaicorp) October 20, 2020
இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதேபோன்று, அனைத்து தனியார் நிறுவனங்களையும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.