பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள குறுங்குடி என்ற கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள குறுங்குடி என்ற கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது 10க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தனர். நாட்டு பட்டாசு தயாரிப்பின்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்தது. மேலும் வெடி மருந்துகள் இருந்ததால் தீவிபத்து ஏற்பட்டு 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டாசு ஆலைக்கு முறையாக உரிமம் வாங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.