நாட்டிற்காக காட்டை காக்க சென்று தன் சொந்த வீட்டினரை பறி கொடுத்த தீயணைப்பு வீரர்!
![](https://thambattam.com/storage/2020/09/564266e81b602.image_-780x470.jpg)
தீயணைப்பு வீரர் ஒருவர் காட்டுத்தீயை அணைக்க போராடிக்கொண்டிருந்த நேரத்தில், தன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் தன் சொந்த குடும்பத்தை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்னின் பெண்டான் பகுதியில் வசித்துவருபவர் தீயணைப்பு வீரர் ரவுல் கார்சியா. அவர் நேற்று முன் தினம் தன் குடும்பத்துடன் சேர்ந்த புது வீட்டிற்கு குடி பெயர்ந்த நிலையில், கனடாவின் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க ரவுல் சென்றுவிட்டார். இவர் பணிக்கு சென்றதை அடுத்து, அவரது வீட்டில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர்.
![](https://thambattam.com/storage/2020/09/5c0204d5cc31556aa4612f3d9caa7437a3b6b2c6cbba25efe349cb6411673471-300x174.jpg)
அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தால் வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. அவர்களின் வீடு, ஊருக்கு சற்று தொலைவில் இருந்ததால் யாரும் தீப்பற்றிய உடனே தீயணைப்புத்துறையினருக்கு யாராலும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. தாமதமாகவே தகவல் கிடைத்ததை அடுத்து, அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்புத்துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஏனெனில், அந்த வீட்டில் இருந்த ரவுலின் மனைவி மற்றும் 3 குழந்தைகளும் உடல் கருகி உயிரிழந்துவிட்டனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து ரவுலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ரகுல் மிகவும் அதிர்ச்சி அடைந்து தனது வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.
![](https://thambattam.com/storage/2020/09/5b47ea8e2948392eebf924b7f92d06e00869918792fbfa19f7a9d60e458381bc-300x181.jpg)
அவர்கள் அப்பகுதிக்கு புதிதாக குடிபெயர்ந்ததால் நண்பர்கள் மட்டுமே ரவுலுக்கு ஆறுதலாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 4 பேரின் இறுதிச்சடங்கிற்கு ரவுலிடம் போதிய பணம் இல்லாத காரணத்தால் ஆன்லைன் மூலம் தற்போது நிதி திரட்டப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.