இது அதுல்ல..! ஒரு ஈயை கொல்ல முயன்று வீட்டையே தீயிற்கு தாரை வார்த்த முதியவர்!
![](https://thambattam.com/storage/2020/09/bc9b6ed6c66dc8dc8230b0788401fbc259572a850297a3ec00ba7b24985dd6f6-780x400.jpg)
முதியவர் ஒருவர் ஈ அடிப்பதற்காக எலக்ட்ரானிக் பேட் பயன்படுத்தியபோது சமையலறை முழுவதும் எரிந்து சேதமடைந்து, வீட்டை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் பார்கோல்-செனாட் என்ற சிறிய கிராமத்தில் 82 வயதான நபர் ஒருவர் இரவு உணவை சாப்பிடும்போது ஒரு ஈ அவரை மிகவும் எரிச்சலாக்கியது. அந்த ஈயைக் கொல்வதற்காக, அந்த நபர் மின்சார பேட் ஒன்றை பயன்படுத்தியுள்ளார்.
![](https://thambattam.com/storage/2020/09/20160509104211_72917-300x173.jpg)
அதே சமயத்தில், அவரது வீட்டில் இருந்த சிலிண்டர் மூலம் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதனை அவர் உணரவில்லை. மின்சார பேட்டில் வாயு பாய்ந்த போது வெடிப்பு ஏற்பட்டது. வெடிப்பின் காரணமாக, அவரது சமையலறை முற்றிலுமாக சேதமடைந்தது மட்டுமல்லாமல், வீட்டின் மேற்கூரையும் சேதமடைந்துள்ளது.
![](https://thambattam.com/storage/2020/09/weare-fire-0119-1526350864-e1599567621729-300x173.jpg)
ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த நபருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அவரது கையில் தீக்காயம் மட்டுமே இருந்தது. அதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த நபருடைய வீடு வசிப்பதற்கு தகுந்ததாக இல்லை என்று ஒரு முகாமில் அந்த முதியவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
ஒரு ஈ -ஐ கொல்ல முயன்றதற்கு, வீட்டின் சமையலறை மற்றும் மேற்கூரை சேதமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது,