குழந்தைகள் கண்முன்னே பலாத்காரம் செய்யப்பட்ட தாய்க்கு நீதி கேட்டு வீதிக்கு வந்த பாகிஸ்தான் பெண்கள்!
பாகிஸ்தானில் குழந்தைகளுடன் சென்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தீவிர போராட்டத்தில் மக்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் நாட்டின் லாகூர் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் காரில் சென்றுள்ளார். அப்போது பாதி வழியில் தீடீரென பெட்ரோல் தீர்ந்து விட்டதால் கார் நடுவழியில் நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் உதவிக்காக போலீசாரை அழைக்க முற்பட்டுள்ளார்.
அந்நேரத்தில் அங்கு வந்த சிலர் அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி குழந்தைகள் முன்னிலைலேயே கடத்தியுள்ளனர். பின்னர் நெடுஞ்சாலையின் அருகே தூக்கிச்சென்ற மர்ம நபர்கள் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கொடூரர்களின் கோர பிடியில் இருந்து நீண்ட நேரத்திற்கு பிறகு மீண்டுவந்த அப்பெண் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
குழந்தைகளுடன் சென்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பெண்கள் போராட்டம் ஈடுபட்டுள்ளனர். இதேநேரத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் இருவரை அடையாளம் கண்டுள்ளதாகவும், விரைவில் கைது செய்வோம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
எனினும் குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.