தமிழர்கள் தங்கள் தாய் மொழி குறித்து பெருமை கொள்வது நியாயமே!! ப.சிதம்பரம் ட்வீட்!

இந்தியாவில் மக்கள் பேசும் மொழிகளிலேயே தமிழ் மொழி பழமையான மொழியாக இருப்பதால், தமிழக மக்கள் அதை பற்றி பெருமைப்படுகிறார்கள் என்று காங்கிரஸ் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் டிவிட் செய்துள்ளார்.

இந்திய அரசியல் நிர்ணய சபையானது கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி, இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்தை வழங்கியது. இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ந்தேதி இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்தி தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் இந்தி தினம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “இந்தி தினத்தை இந்தி பேசும் மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்தி பேசும் மக்கள் தங்கள் மொழியை கொண்டாடுவதை ஏற்றுக்கொள்கிறோம். அதே சமயம் இந்தியாவில் மக்கள் பேசும் மொழிகளிலேயே தமிழ் மொழி பழமையான மொழியாக இருப்பதால், தமிழக மக்கள் அதை பற்றி பெருமைப்படுகிறார்கள். தமிழர்கள் தங்கள் மொழி குறித்து பெருமை கொள்வது நியாயமே.

கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்பட்ட அகழாய்வு இதை உணர்த்துகிறது. அங்கு செய்யப்பட்டு வரும் அகழாய்வுகள் தமிழக பண்பாட்டின் 2600 ஆண்டுகள் பழமையை உலகிற்கு எடுத்துக்காட்டி உள்ளது. இதன் மூலம் தமிழக பண்பாடு உலகம் முழுக்க தெரிந்துள்ளது” என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x