ஆன்லைனில் விளையாடக்கூடாது என்று திட்டியதால் ஆன்லைனிலேயே விஷம் வாங்கி குடித்த இளைஞர்!

“எப்போதும் ஆன்லைனில் படிக்கும் நேரத்தை விட அதிகமாக விளையாடிக் கொண்டு இருக்கிறாய்” என்று அப்பா திட்டியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை ராஜேந்திர நகரைச் சேர்ந்தவர் அர்ஜூனன் என்பவர். இவர் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் மகன் நிஷாந்த், மும்பையில் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். கொரோனா லாக்டவுன் காரணமாக அவர் இப்போது பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆன்லைன் மூலமாக பாடங்களைக் கவனித்து வந்த அவர் மற்ற நேரங்கள் முழுவதும் செல்போனில் விளையாடி வந்தார்.

இதனால் அவரது அப்பா அவரை அதிருப்தியுற்று அவரை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த நிஷாந்த், ஆன்லைன் மூலமாகவே பாய்சன் வாங்கி, அதைக் குடித்துள்ளார். அதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.