75 ஆண்டுகளாக அறிவொளி விதைக்கும் ஆசிரிய பணியை விரும்பி செய்யும் முதியவர்!

ஒடிசாவை சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த 75 ஆண்டுகளாக, கட்டணம் எதுவும் வசூலிக்காமல் குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறார்.
ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நந்தா பிரஸ்தி என்ற முதியவருக்கு ஆசிரியர் பணி என்றால் மிகவும் விருப்பம். தனது கிராமத்தில் ஏராளமானோருக்கு படிப்பறிவு இல்லாததை நினைத்து கவலையில் இருந்துள்ளார். இதனையடுத்து அவர்களுக்கு தானே கற்பிக்க முன்வந்துள்ளார். குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் இரவு நேரத்தில் பாடம் நடத்துகிறார்.

கடந்த 75 ஆண்டுகளாக அவர் இதனை செய்து வருகிறார். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், அவர் இதற்காக கட்டணமே வசூலிக்கவில்லை என்பதுதான். இவர் மரத்தின் அடியில் அமர்ந்தே பாடம் நடத்துகிறார். தேவையான வசதிகளை அமைத்து தருவதாக கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் எவ்வளவு கூறியும் முதியவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தனக்கு மிகவும் பிடித்த இந்த பணியை இயற்கையோடு இணைந்து செய்யவே அவர் விரும்பினார்.
முதுமையிலும், மழை, வெயில் என அனைத்தையும் தாண்டி குழந்தைகளுக்கு கற்பிக்கும் இந்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இருப்பினும் அவரது முதுமையை கருத்தில் கொண்டு, கட்டடம் கட்டித் தரப்படும் என கிராம பஞ்சாயத்து உறுதியளித்துள்ளது.