“ஏழைகளுக்கும், பட்டியலின மக்களுக்கும் எதிரானது யோகி ஆதித்யநாத் அரசு!” காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு!

ஏழைகளுக்கும், பட்டியலினத்தவர்களுக்கும் எதிரானது யோகி ஆதித்யநாத் அரசு என்று ஹாத்ரஸ் சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், ஆதிக்க சாதியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (செவ்வாய்க் கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்புகள் போராடி வருகின்றன. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்து வருகின்றனர். இதனிடையே உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ஏழைகளுக்கும், பட்டியலினத்தவர்களுக்கும் எதிரான அரசாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
भारत की एक बेटी का रेप-क़त्ल किया जाता है, तथ्य दबाए जाते हैं और अन्त में उसके परिवार से अंतिम संस्कार का हक़ भी छीन लिया जाता है।
ये अपमानजनक और अन्यायपूर्ण है।#HathrasHorrorShocksIndia pic.twitter.com/SusyKV6CfE
— Rahul Gandhi (@RahulGandhi) September 30, 2020
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தனது சுட்டுரையில், ”இந்தியாவில் ஒரு மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள், அதில் உண்மைகள் அடக்கப்படுகின்றன. மேலும் பெண்ணின் இறுதிச் சடங்கிற்கான உரிமையும் அவரது குடும்பத்திடமிருந்து பறிக்கப்படுவது அநியாயமானது” என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
I was on the phone with the Hathras victim’s father when he was informed that his daughter had passed away. I heard him cry out in despair. 1/3
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 30, 2020
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். “ஹத்ராஸ், ஷாஜகான்பூர் மற்றும் கோரக்பூரில் நடைபெற்றுள்ள கற்பழிப்பு சம்பவங்கள் மாநிலத்தை உலுக்கியுள்ளன. உ.பி.யில் சட்டம் ஒழுங்கு பெருமளவில் மோசமடைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. குற்றவாளிகள் வெளிப்படையான குற்றங்களைச் செய்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு யோகி ஆதித்யநாத் தான் பொறுப்பு. இந்தப் பெண்ணைக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரம் மூத்த தலைவர் திக்விஜய் சிங் இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ”முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு குற்றவாளிகளை காக்கும் அரசாக மட்டுமே உள்ளது. ஏழை பெண்ணுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தில் பிரியங்கா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் தொண்டனர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்காக நிற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.