ஊரடங்கு காலத்தை உபயோகப்படுத்தி, சமூக ஊடகங்களில் வைரலாக உலா வரும் மாணவி!
![](https://thambattam.com/storage/2020/10/Ej8lcaQUYAA3eNy-e1602329848654-780x470.jpg)
இந்த ஊரடங்கு காலத்தில் பழைய பொருட்கள் மற்றும் பாட்டில்களைப் பயன்படுத்தி கைவினைப் பொருட்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் வைரலாக உலா வரும் மாணவி!
மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெனிஃபர் இந்த ஊரடங்கு நாட்களை பயனுள்ளதாக்கி வருகிறார். தூக்கி எறியப்படும் பாட்டில்களைக் கொண்டு கைவினைப் பொருட்களை உருவாக்குகிறார். இது தன்னுடைய சின்ன வயது ஆசை என்றும், தற்போதுதான் இவற்றை செய்ய போதுமான நேரம் கிடைத்திருப்பதாகவும் கூறுகிறார் ஜெனிஃபர்.
![](https://thambattam.com/storage/2020/10/Ej8lcaQU8AE0UFe-e1602329827628-300x179.jpg)
பழைய பாட்டில்களை சுத்தப்படுத்தி, அதை டிஸ்யூ பேப்பர், பெயிண்டுக்களைக் கொண்டு அலங்கரித்து வருகிறார். இந்த 2020ஐ எப்போதும் தனது படைப்புகளுக்காக நினைவுகூற வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவருடைய கைவினைப் பொருட்கள் தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இவரின் முயற்சியை பாராட்டி வருகின்றனர்.