டிக்டாக் மீதான தடையை நீக்கியது பாகிஸ்தான் அரசு!!
‘ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான’ உள்ளடக்கத்தை தடுக்க தவறியதற்காக தடை விதிக்கப்பட்டிருந்த டிக்டாக் மீதான தடையை நீக்க முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான உள்ளடக்கத்தைத் தடுக்க தவறியதற்காக பாகிஸ்தான் அரசு, டிக்டாக் மீது 10 நாட்களுக்கு முன்பு தடை விதித்தது. சட்டவிரோத உள்ளடக்கத்தை தடுக்க நிறுவனம் தயாராக இருந்தால், டிக்டாக்குடன் கலந்துரையாடலுக்கு தயார் என கூறியிருந்தது.
“ஆபாசத்தையும் ஒழுக்கக்கேட்டையும் பரப்புவதில் ஈடுபடும் அனைத்து கணக்குகளும் தடுக்கப்படும் என்று, டிக்டாக் நிர்வாகம் உறுதியளித்தபிறகு இந்த செயலி மீதான தடை நீக்கப்படுகிறது” என்று பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (பி.டி.ஏ) ட்வீட் செய்துள்ளது.”
பாகிஸ்தானில் சுமார் 20 மில்லியன் டிக்டாக் பயனர்கள் உள்ளனர். கடந்த 12 மாதங்களில் பாகிஸ்தானில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மூன்றாவது பயன்பாடாக டிக்டாக் உள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.