செல்லும் இடமெல்லாம் மோடிக்கு உருவாகும் எதிர்ப்பு…. பீகாரிலும் டிரெண்டிங் ஆன #GoBackModi!!!

பிரதமர் மோடியின் பீகார் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.
Where was Mr. Modi when labourers & migrants were travelling thousands of Kms on foot??What he did for these labourers & migrants??
Bihar wants to know🙏🙏#BiharRejectsModi #GoBackModi #BiharWithRahulGandhi pic.twitter.com/ZG5qxpzGQ6
— Aman Sharma (@amanbhargava88) October 23, 2020
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. அக்டோபர் 28-ல் தொடங்கி நவம்பர் 7-ந் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். பீகாரில் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் பிரசார களத்தில் குதித்துள்ளனர். இன்று ஒரே நாளில் மோடியும், ராகுல் காந்தியும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பீகாரில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங்கானது. இந்த ஹேஷ்டேக் பக்கத்தில் பீகார் இடம்பெயர் தொழிலாளர்கள் அவலம் குறித்த பதிவுகள் ட்வீட் செய்யப்பட்டுள்ளன.
The truck for Bihar is full, #GoBackModi pic.twitter.com/zHyUtvAJg5
— ad solanki (@ad_solanki) October 23, 2020
அத்துடன் பீகாரில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மைக்கு என்ன தீர்வு காணப்பட்டது என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் கடந்த காலங்களில் பிரதமர் அளித்த வாக்குறுதிகளும் அதை நிறைவேற்றாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டும் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.