பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரங்கள் பரோல் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!!

பேரறிவாளனுக்கு மேலும் 90 நாள்கள் பரோல் கோரி மனுதாக்கல் செய்த நிலையில், 2 வாரங்கள் பரோல் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் கோரி, அவரது தாயாா் அற்புதம்மாள் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றம் 30 நாள்கள் மட்டுமே பரோல் அளித்திருந்தது. பின்னர் இருமுறை இரண்டு வாரம், ஒரு வாரம் என பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பேரறிவாளன் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவருக்கு சிகிச்சையளிக்க 90 நாள்கள் பரோல் அளிக்க வேண்டுமென பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மேலும் இரண்டு வாரம் பரோலை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.