கொரோனா விளையாட்டு இந்த நாடுகளில் பலிக்கவில்லை!

ஸ்பெயினில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் இறக்க, அதன் அண்டை நாடான போர்ச்சுகலில் 500க்கும் குறைவான மக்களே பலியாகியிருக்கின்றனர். இந்த ஏற்றத்தாழ்வான இறப்பு விகிதத்தின் மர்மம் என்ன?

ஐபீரிய கண்டம் (Iberian peninsula) என்றழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகள் மிக அருகருகே தங்கள் எல்லைகளை அமைத்துக்கொண்டுள்ளன. ஸ்பெயினிலிருந்து போர்ச்சுகல் செல்வது மதுரையிலிருந்து சென்னைக்கு வரும் தூரமே. அப்படியிருக்கையில், கொரோனா பாதிப்பால் அதிக மக்களை பலிகொடுத்த நாடாக ஸ்பெயின் உள்ளது. இங்கு, 17 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள், 1.7 லட்சம். ஆனால், அதன் எல்லையிலிருக்கும் போர்ச்சுகலில், பாதிக்கப்பட்டோர் வெறும் 16 ஆயிரம் மட்டுமே.இறந்தவர்கள் 500ஐ தாண்டவில்லை.

ஏன் இந்த ஏற்றத்தாழ்வு என்பது மர்மமானதாக இருந்தாலும், இரு நாடுகளில் பயன்படுத்த தடுப்பூசி வித்யாசமே முக்கியமான காரணம் என்று கருதப்படுகிறது. போச்சுகலில், ஏற்கனவே காசநோய்க்கு எதிராக தடுப்பூசி போடுவது கட்டாயமாக உள்ளது. ஆனால், கொரோனாவால் அதிக இறப்புகளை சந்தித்த இத்தாலியிலோ (இறப்பு- 19,500), ஸ்பெயினிலோ, காசநோய் தடுப்பூசி கட்டாயம் இல்லை. அதேசமயம், எங்கெல்லாம் காசநோய்க்கு எதிரான தடுப்பூசியான பேசிலஸ் கால்மெட்-குய்ரின்” (பி.சி.ஜி), முன்னர் பயன்படுத்தப்பட்டதோ, அங்கு கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. உதாரணத்துக்கு, காசநோய் தடுப்பூசி போடப்படும்  ஜப்பானில், கொரோனா வைரஸால் 63 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

நம் இந்தியாவில், இது ‘தோல் ஊசி’ என்ற பெயரில், குழந்தை பிறந்ததும் போடப்படும் முதல் தடுப்பூசியாகும். தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளில்,

“இந்த பி.சி.ஜி தடுப்பூசியின் இல்லாத நாடுகளே (இத்தாலி, நெதர்லாந்து, அமெரிக்கா) கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பி.சி.ஜி தடுப்பூசி சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பை உருவாக்கும்.”

என்று தெரியவந்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் குழு, காசநோய் தடுப்பூசியை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்த ஆய்வில் இறங்கியுள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x