மருத்துவர்மரணத்தால்,ஏழைகள் இன்னும் ஏழை ஆயினர்!!!
![](https://thambattam.com/storage/2020/08/images-2.jpeg)
கோயம்புத்தூர் :
கோரோனாவால் உயிர் நீத்த மருத்துவரின் இழப்பால்,அவரை நம்பி வரும் ஏழைகள்,இன்னும் ஏழை ஆகினர்!!!
![](https://thambattam.com/storage/2020/08/images-2.jpeg)
“அவர் கோவை மாவட்டம் மட்டுமல்ல, அதைச் சுற்றியுள்ள எல்லா ஊர் மக்களின் நாடி நரம்புகளில் வாழ்பவர். அவர் வைத்தியத்தைவிட, நோயாளிகளிடம் அவரின் அணுகுமுறையே அவரை இவ்வளவு பெரிய உச்சத்துக்குக் கொண்டு சென்றது. தினமும் நள்ளிரவு 2 மணி வரை காத்திருந்து இவரைப் பார்த்துச் செல்வார்கள். எப்படியோ, ஒரு நோயாளி மூலம் வந்து, இவர் பலியானது துரதிர்ஷ்டத்தின் உச்சம். மரணம் தவிர்க்க முடியாதது.மருத்துவர் பிரனேஷ்
ஆனால், இவரின்றி இவரை நம்பி வந்த ஏழைபாழை நோயாளிகளுக்கு இனி ஏற்படப்போகும் மரணங்கள் தவிர்க்க இயலாதது. அதுதான் இழப்பு” என்று மருத்துவர் பிரனேஷ் மரணத்துக்கு, அவரின் உறவினர்கள், மருத்துவர்கள், அவரால் பலனடைந்த பொது மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.