இ-பாஸுக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்… ஆத்திரமடைந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்!!!!
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனாவால் மக்கள் கடந்த 4 மாதங்களாக சுதந்திரமாக தங்களின் வேலைகளை செய்ய முடியாமால் வீட்டுக்குள்ளேயே முடங்கி போய் உள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் செல்ல ஈபாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட மிக முக்கிய காரணங்களுக்காக மட்டுமே இபாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த காரணங்களுக்காக கூட பாஸ் வழங்கப்படுவதில்லை என மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
இதனால் இபாஸ் முறையை நீக்க வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு பதில் அளித்த முதல்வர், இபாஸ் முறையை இப்போது நீக்க முடியாது என்றும் அதற்கு மாறாக இபாஸ் வழங்கும் நடைமுறையை எளிமையாக்குவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே சில இடங்களில் இபாஸ் பெற அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த நிலையில் கொரோனா காலத்திலும் இ-பாஸுக்கு லஞ்சம் வாங்குவதை அறிந்து வேதனை அடைந்த நீதிபதிகள், “ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்பட்டு அதிகாரிகள் ஊழல் செய்கின்றனர்! அத்தகைய அதிகாரிகள் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.