சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து சுப்பிரமணிய சுவாமி எம்.பி பரபரப்பு ட்வீட்!!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் மாதம் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது பாந்த்ரா குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் மரணம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாதம் திருகப்பட்டிருந்தது என்று அவரது உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் உதவியாளரின் திடுக்கிடும் வாக்குமூலத்திற்கு பிறகு, பாஜக மாநிலங்களவை எம்.பி சுப்ரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளது அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த ஆர்.சி.கூப்பர் நகராட்சி மருத்துவமனையின் ஐந்து மருத்துவர்களை, சிபிஐ விசாரணை செய்வது பயன்தருவதாக இருக்கும். சுஷாந்த் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகன ஊழியரின் கூற்றுப்படி, சுஷாந்தின் உடல் மஞ்சள் நிரமாகிவிட்டதாகவும், கணுக்காலுக்கு கீழுள்ள பாதங்கள் இரண்டும் முறிந்ததைப் போன்று திருகப்பட்டிருந்தது என்று தெரிகிறது. இந்த வழக்கில் இருந்து மர்ம முடிச்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து வருகிறது!” என்று தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணிய சுவாமியின் பதிவையடுத்து சுஷாந்த் மரணம் தொடர்பான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x