“சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு” என்ற உச்ச நீதிமன்றம் அதிரடி! தலைவர்கள் வரவேற்பு!!

நாட்டிலேயே முதன்முதலில் இந்து வாரிசுரிமை சட்டம் (தமிழ்நாடு சட்டதிருத்தம்) 1989ன் மூலம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி. புரட்சிகரமான இந்த திட்டத்தை கருணாநிதி அரசு கொண்டு வந்தது.

இந்திய சொத்துரிமைச் சட்டம் 1956இன் திருத்தங்கள் 2005ல் கொண்டுவரப்பட்டன. அதாவது, தமிழகம் சட்டம் இயற்றிய சுமார் 16 வருடங்கள் கழித்துதான், தேசிய அளவில் அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.  2005-ஆம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இப்போது மத்திய அரசின் அந்த தீர்ப்பினை எதிர்த்துத் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், 3 நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். “ஒரு பெண் எப்போதும் அந்த வீட்டின் செல்ல மகள்தான்” என்று கூறிய உச்சநீதிமன்றம் குடும்பச் சொத்துப் பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உள்ளது என தீர்ப்பளித்துள்ளது.

குடும்பச் சொத்துப் பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.” என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிபிட்டுள்ளார்.

இது குறித்து முக.ஸ்டாலின் கூறுகையில் “குடும்பச் சொத்துப் பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ள மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென 1989ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞர் – திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது! உரிமை கொண்டவர்களாக பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு!” என்று கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x