நாடு முழுவதும் 1,138 விரைவு ரயில்கள் இயக்கம்

நாடு முழுவதும் 1,138 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாகக் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் வழக்கமான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் படிப்படியாகச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று ரயில்வே அமைச்சகம் வெளியியிட்ட அறிக்கையில், கரோனா பரவலுக்கு மத்தியில் இந்திய ரயில்வே சார்பில் தற்போது நாடு முழுவதும் பண்டிகைகால சிறப்பு ரயில்கள் உள்பட மொத்தம் 1,138 விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் உள்ள புறநகர் ரயில் சேவைகளில் மொத்தம் 4,807 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளது.