“சுரேஷ் ரெய்னா மாமா கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் கைது!” பஞ்சாப் முதல்வர் தகவல்!

சுரேஷ் ரெய்னா மாமாவின் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் அத்தை குடும்பத்தினர் கடந்த ஆகஸ்ட் 19 அன்று பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கொள்ளையர்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் ரெய்னாவின் மாமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ரெய்னாவின் அத்தை மற்றும் அத்தையின் மகன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் மாநில அரசு முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ரெய்னா பஞ்சாப் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ரெய்னாவுக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில் இந்த சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு, கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளதாக பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் தெரிவித்திருந்தார். புலனாய்வு குழுவின் விசாரணையில் முதற்கட்டமாக சுமார் பத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக கண்டறிந்தனர்.

தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் 302, 307, 148 மற்றும் 149 பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 11 பேரை தேடி வருவதாகவும் பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x