அடுத்தடுத்து இரண்டு கொலைகள்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!

நத்தம் அருகே இளைஞர் கொலை செய்யபட்ட வழக்கில் கூலித் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் பகுதிக்கு அருகே ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவருடைய மகன் ஸ்ரீகாந்த் என்ற 18 வயது இளைஞர் சென்னை வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்த அவர் நேற்றிரவு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சிகள் காத்திருந்தது. போலீசார் கொலையாளியை தேடி வந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த கூலி தொழிலாளியான கண்ணன் என்று அழைக்கப்படும் ராமச்சந்திரன் என்ற 33 வயது நபர் மாமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்.
இது குறித்து விசாரணை நடத்திய பொழுது இருவரும் ஓரின செயற்கை முறையில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். அதற்கான ஆதாரமாக கடிதம் ஒன்றும் சிக்கியிருக்கிறது. இருவருக்கும் ஏற்பட்ட உறவு தகராறினால் ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். கொலையாளியை காவல்துறையினர் தேடி வருவதால் ராமச்சந்திரன் தூக்குப்போட்டு மாமரத்தில் தொங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு தொடர் மரணத்தினால் அந்த கிராமமே பெரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது.