தொடர்ந்து சரிந்து வரும் தங்கத்தின் விலை நிலவரம்..!

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.39,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. மேலும் பல்வேறு தொழில்களும் முடங்கி உள்ளதால், தொழில்துறையில் மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகப் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். எனவே பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி, பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. இதைத் தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக விலை மீண்டும் உயா்ந்தது.
இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை 22 கிராம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.39,016-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.34 குறைந்து, ரூ.4,877 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக குறைந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.1600 குறைந்து ரூ.73.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.