திண்டுக்கலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவி!!

திண்டுக்கலில் குடும்ப தகராறு காரணமாக ஊராட்சி மன்ற தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தாலுகா சத்திரபட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பிரவீன்குமார் மற்றும் இந்திரா தம்பதியர். சென்னமநாயக்கன்பட்டியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் திண்டுக்கல் அருகே உள்ள சென்னம நாயக்கன்பட்டியில் தென்னை மட்டை நார் கம்பெனி நடத்தி வருகின்றனர்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சத்திரப்பட்டி தலைவர் பதவிக்கு இந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு அவர் சென்னமநாயக்கன்பட்டியில் இருந்து சத்திரபட்டிக்கு சென்று வருவதில் சிரமம் இருந்து வந்தது. இது தொடர்பாக கணவன் மனைவியிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தனது கணவர் தன்னுடன் பேசாமல் ஹோட்டல்களில் உணவு அருந்தி வந்ததால் மனம் உடைந்த இந்திரா வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு வந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.