கொரோனா வார்டில் தீ விபத்து 8 பேர் பலி….
![](https://thambattam.com/storage/2020/08/maxresdefault-3-780x470.jpg)
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்பூரா என்ற பகுதியில் உள்ள ஷீரா மருத்துவமனை உள்ளது இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் அந்த மருத்துவமனையில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.இந்த தீ விபத்தில் மேலும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.